வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தயம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்ட வீடுகளை கோர்ட்டு உத்தரவின்பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில் தார் மனோஜ் முனியன் தலைமையில் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினார்கள். அப்போது சில வீடுகளின் பிற பகுதிகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் தனி தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலா ளர் பா.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். துணை தலைவர் சையது உசேன் வரவேற்றார். இதில் ஏராளமான வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தனிதாசில்தாரை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி நடை பெற்ற போராட்டத்தில் பிற துறை ஊழியர்கள் உள்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர் என்றனர்.