வடமாநில தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் வருவாய் துறையினர், போலீசார் ஆய்வு
ஆனைமலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் வருவாய் துறையினர், போலீசார் ஆய்வு செய்தனர்.
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை தாலுகாவில் உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் தனியார் நூல் மில்லில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் போதை மாத்திரை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்று ஆனைமலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ் ஆகியோர் தங்கும் விடுதி விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை மேற்கொண்டனர் அப்போது அவர்கள் இடமிருந்து ஹான்ஸ் கணேஷ் போன்ற குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போதை பொருட்களை பயன்படுத்த கூடாது, மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story