வருவாய்த்துறை நிலம் ஒப்படைப்பு


வருவாய்த்துறை நிலம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:45 PM GMT)

பந்தலூரில் புதிய நீதிமன்றம் கட்ட வருவாய்த்துறை நிலம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அட்டி செல்லும் சாலையோரத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த அந்த நிலத்தை கடந்த ஆண்டு வருவாய்த்துறையினர் மீட்டனர். அங்கு விளையாட்டு மைதானத்தையொட்டி நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கைப்பந்து, கால்பந்து வீரர்கள் நீதிமன்றம் கட்டினால் விளையாட தடை ஏற்படும். எனவே, வேறு இடத்தில் நீதிமன்ற கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி, கூடலூர் ஆர்.டி.ஓ., பந்தலூர் தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இந்தநிலையில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு கட்டப்பட இருந்த இடத்தில், புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக 2 ஏக்கர் 68 சென்ட் நிலம் நீதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவகுமாரிடம், தாசில்தார் நடேசன் அதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், நில அளவையர் செந்தில் கண்ணன் உடனிருந்தனர்.


Next Story