போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம்


போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம்
x
சேலம்

மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் நேற்று சேலம் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து மேற்கு மண்டலத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குள் குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

ஆய்வுக்கூட்டத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சரோஜ்குமார் தாக்கூர் (கிருஷ்ணகிரி), சிவகுமார் (சேலம்), ஸ்டீபன் ஜேசுபாதம் (தர்மபுரி), ராஜேஷ்கண்ணன் (நாமக்கல்), ஜவகர் (ஈரோடு), சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story