அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்


அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2023 11:41 PM IST (Updated: 21 Jan 2023 11:51 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சம்பத் பேசுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ள மக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் பணிகளை தனிக்கவனம் செலுத்தி முடிக்க வேண்டும்' என்றார்.

அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஆற்காடு நகராட்சியில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் விவரங்கள் மற்றும் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும், நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story