எஸ்.சி., எஸ்.டி. சாதி சான்றிதழ்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்அதிகாரிகளுக்கு, அரசு கூடுதல் முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்


எஸ்.சி., எஸ்.டி. சாதி சான்றிதழ்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்அதிகாரிகளுக்கு, அரசு கூடுதல் முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:46 PM GMT)

எஸ்.சி., எஸ்.டி. சாதிச் சான்றிதழ்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, அரசு கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் அறிவுறுத்தி உள்ளார்.

கடலூர்

சிதம்பரம்,

திட்டப்பணிகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காணிப்பு குழு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து கூடுதல் முதன்மை செயலாளர் ஜவஹர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக கீழ்க்கண்ட நலத்திட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தை அமல்படுத்துதல் ஆகும். இத்திட்டத்தின் கீழ் 7.5.2021 முதல் 31.12.2022 வரை பாதிக்கப்பட்ட 275 பேருக்கு ரூ.241.71 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 20 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

சுய வேலைவாய்ப்பு திட்டம்

எஸ்.சி., எஸ்.டி. நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கையகப்படுத்தப்பட்ட ஏ.டி.டபிள்யு நிலத்தில் வீடுகள் கட்டுவதற்காக 6,243 பயனாளிகளுக்கு இ -பட்டா வழங்கப்பட்டது. மேலும் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 19,175 மாணவர்களுக்கு ரூ.5.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 39,443 மாணவர்களுக்கு ரூ.22.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் ஊக்கத் திட்டத்தின் கீழ் 70,887 ஆதிதிராவிடர் பெண் குழந்தைகளின் நலனுக்காக ரூ.10.15 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 196 தனிநபர்களின் நலனுக்காக ரூ.314.51 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 102 இளைஞர்களின் நலனுக்காக ரூ.186.42 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 27 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.67.50 லட்சம் பொருளாதார உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

30 நாட்களுக்குள்...

2022 முதல் 2023 ஆண்டு வரை மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் காரணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நிலுவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு செல் அறிக்கையின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தாசில்தார்கள், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், மானுடவியலாளர்கள் எஸ்.சி., எஸ்.டி. சாதிச் சான்றிதழ்களை வழங்கும் போதும், சரிபார்க்கும் போதும் சரிபார்ப்புப் பட்டியலைச் சரிபார்த்து 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை வன பாதுகாவலர் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், சிதம்பரம் சப்-கலெக்டர் ஸ்வேதா சுமன், விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story