புரட்சி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சி தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சி தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு பதிவாளரின் சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும், அனைத்து கோர்ட்டுகளிலும் அம்பேத்கர் படத்தை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். இதில், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story