புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தேனி அல்லிநகரத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது

தேனி

தேனி அல்லிநகரத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கலியமூர்த்தி, விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மாநில அரசின் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராசதுரை தலைமை தாங்கினார். மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story