கிருஷ்ணகிரி அருகேலாரியில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கிருஷ்ணகிரி அருகேலாரியில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே மினி லாரியில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு நாரலப்பள்ளி கூட்டு ரோடு அருகே கிருஷ்ணகிரி- மகராஜகடை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தினார்கள். அதிகாரிகளை கண்டதும் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து மினி லாரியை சோதனையிட்டதில் 50 கிலோ அளவிலான, 80 மூட்டைகளில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. அதிகாரிகள் கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக மேலே தேங்காய் மட்டைகளை அடுக்கி மறைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து லாரியை ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story