தர்மபுரி அருகே சாலையோரத்தில் 50 மூட்டை ரேஷன் அரிசி கிடந்ததால் பரபரப்பு

தர்மபுரி அருகே  சாலையோரத்தில் 50 மூட்டை ரேஷன் அரிசி கிடந்ததால் பரபரப்பு
x

தர்மபுரி அருகே சாலையோரத்தில் 50 மூட்டை ரேஷன் அரிசி கிடந்ததால் பரபரப்பு

தர்மபுரி

தர்மபுரி- மொரப்பூர் சாலையில் குரும்பட்டி பகுதியில் சாலையோரத்தில் நேற்று 50 மூட்டை அரிசி கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி வழியாக சென்றவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த அரிசி மூட்டைகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருப்பது ரேஷன் அரிசி என தெரியவந்தது. அந்த அரிசி மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரிசி மூட்டைகளை அங்கு போட்டவர்கள் யார்? கடத்தி செல்வதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story