பர்கூர் அருகே1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


பர்கூர் அருகே1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர் அடுத்த முருக்கன்பள்ளத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை தாசில்தார் இளங்கோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அலுவலர்களுடன் அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்பகுதியில் உள்ள மோட்டார் அறையில் சோதனையிட்டதில், 24 சாக்கு மூட்டைகளில் 50 கிலோ அளவிலான 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியிருந்தது தெரிந்தது.

அங்கிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அரிசியை பதுக்கியவர் வரட்டனப்பள்ளி, மேல்தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 37) என தெரியவந்தது. இவர் வரட்டனப்பள்ளி பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்றதும் தெரிந்தது. ஆனந்தகுமாரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story