தண்ணீரின்றி கருகும் மானாவாரி நெல் பயிர்கள்


தண்ணீரின்றி கருகும் மானாவாரி நெல் பயிர்கள்
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே தண்ணீரின்றி மானாவாரி நெல் பயிர்கள் கருகி வருகிறது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே தண்ணீரின்றி மானாவாரி நெல் பயிர்கள் கருகி வருகிறது.

கருகி வரும் பயிர்கள்

இளையான்குடி அருகே உள்ள தெற்கு கீரனூர் வலையனேந்தல், கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம், கல்வெளி பொட்டல், கரும்புக்கூட்டம், வடக்கு கீரனூர், சாலைக் கிராமம், முத்தூர், சூராணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொஇளையான்குடி அருகே தண்ணீரின்றி மானாவாரி நெல் பயிர்கள் கருகி வருகிறது.ழிலாக உள்ளது. கடந்த மாதம் பெய்த மழை காரணமாக இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர்.

ஆனால் தற்போது மழையின்றி வெயில் வாட்டி, வதைப்பதால் மானாவாரி நெல் பயிர் கருகி வருகின்றது. பெரும்பான்மையான விவசாயிகள் விதைத்த அதே நெல் தேடி அலைந்து மறு விதைப்பு செய்து வருகின்றனர்.

விதை நெல் மீண்டும் கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். மறு விதைப்பு செய்வதற்கு ஏதுவாக வேளாண் துறை அதிகாரிகள் மீண்டும் விற்பனை செய்த விதை நெல் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தக்க ஆலோசனைகளும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். மேலும் வரும் நாட்களில் மழை பெய்யாவிட்டால் அனைத்து நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளும் மறு விதைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக அரசு மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி, விதை நெல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story