நெல் சாகுபடி பணிகள் தீவிரம்


நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
x

வத்திராயிருப்பு பகுதியில் தொடர்மழை காரணமாக நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியில் தொடர்மழை காரணமாக நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல் சாகுபடி

வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில் வ.புதுப்பட்டி, கூமாபட்டி, எஸ்.கொடிக்குளம், நெடுங்குளம், ரஹ்மத் நகர், கிழவன் கோவில், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு தோறும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

அதேபோல தற்போது விவசாயிகள் நெல் நடவிற்கு வயல்களை தயார் செய்து வருகின்றனர். நெல் நாற்றுக்கள் தற்போது நாற்று நடுவதற்கு தயாராகி உள்ளதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் உள்ள வரப்புகளை சுற்றுக்கல் வெட்டியும், நெல் நாற்று நடுவதற்கு டிராக்டர் மூலம் வயல்களை உழவு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை பகுதிகளிலும், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்வதால் நீர்நிலைகள், நீர்வரத்து பகுதிகள், கண்மாய்கள் ஆகியவற்றில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது.

ஆதலால் முதல் போக நெல் நடவு பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.

1 More update

Next Story