மோட்டார் சைக்கிள்கள் மோதலில் அரிசி ஆலை தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதலில் அரிசி ஆலை தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதலில் அரிசி ஆலை தொழிலாளி பலியானார்

திருவண்ணாமலை

ஆரணி

மோட்டார் சைக்கிள்கள் மோதலில் அரிசி ஆலை தொழிலாளி பலியானார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா வட சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 50). இவர் ஆரணி பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பாய்லர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வாரத்திற்கு ஒருமுறை சொந்த ஊரான வட சிறுவள்ளூர் கிராமத்திற்கு சென்று விட்டு திரும்புவார். அதன்படி நேற்று முன்தினம் விடுமுறையையொட்டி ஊருக்கு சென்ற வேலாயுதம் மோட்டார்சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆரணி- போளூர் நெடுஞ்சாலையில் ஆலம்பூண்டி கிராமம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை அவர் முந்த முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் இவர் வந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வேலாயுதம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலாயுதத்தின் சகோதரர் நடராஜன் அளித்த புகாரின்பேரில் களம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த வேலாயுதத்திற்கு நவநீதம் என்ற மனைவியும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.


Next Story