அரிசி ஏற்றிச்சென்ற லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து - இருவர் படுகாயம்


அரிசி ஏற்றிச்சென்ற லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து - இருவர் படுகாயம்
x

ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு அரிசி ஏற்றிச்சென்ற லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

விருதுநகர்


ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்திற்கு ராஜபாளையம் வழியாக, அரிசி மூட்டைகளை ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது . லாரியை பரமக்குடியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் ஓட்டி வந்தார். திருமூர்த்தி என்பவர் உடன் வந்துள்ளார்.

இந்நிலையில் ,ராஜபாளையத்தில் வைத்து அஜித்குமார் மது அருந்தி விட்டு லாரியை அதிக வேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது. அப்போது தென்காசி சாலையில் தேவதானத்திற்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் லாரிக்குள் இருந்த இருவரையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story