ரிக் அதிபர் தற்கொலை
திருச்செங்கோடு அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரிக் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிபாளையம்
ரிக் அதிபர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டப்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36). இவர் ரிக் அதிபர் ஆவார். இவரது மனைவி பூங்கொடி. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பிரபாகரனுக்கு தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரபாகரன் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று வீட்டில் ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரிக் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.