தேங்காய் சிரட்டை விலை உயர்வு


தேங்காய் சிரட்டை விலை உயர்வு
x

தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல்,

நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.8-க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ.10-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story