ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம்
ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவல வளாக கூடத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், சவரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். அலுவலக உதவியாளர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட வாணாபுரத்தில் புதிய தாலுகா அலுவலகம் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் வேலு மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.