ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம்
ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் பாபு வரவேற்றார். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் மணல் மூட்டைகள் தயார் செய்து வைப்பது, ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள சேதமடைந்த அரசு கட்டிடங்களை இடிப்பது என்பன உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்வது குறித்தும், வரவு-செலவு கணக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.