ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரியில்முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுநாளை மறுநாள் தொடங்குகிறது


ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரியில்முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுநாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மேலும் 30-ந்தேதி நடைபெறும் ராணுவம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வில் தர வரிசை பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதுதவிர ஜூன் 1-ந் தேதி புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் பாட பிரிவில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறும். இதே போல் 2-ந்தேதி வணிகவியல் மற்றும் பொருளியல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும். மேலும் www. gascrishivandiyam.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்ட கலந்தாய்வு தரவரிசை பட்டியலை பார்வையிட்டு மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story