நெகமம்-வடசித்தூர் ரோட்டில் மண் குவியலால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


நெகமம்-வடசித்தூர் ரோட்டில் மண் குவியலால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமம்-வடசித்தூர் ரோட்டில் மண் குவியலால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

கோயம்புத்தூர்

நெகமம்

பொள்ளாச்சி பகுதியில் இருந்து திண்டுக்கல் வரை நெடுஞ்சாலை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பல்வேறு இடங்களில் இருந்து மண் எடுத்து கொட்டப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நெகமம் பகுதியில் உள்ள வடசித்தூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மண் எடுத்து வருகிறது. இந்த லாரிகள் 20-க்கும் மேற்பட்டவை இரவு, பகலாக மண் எடுத்து கொண்டு வடசித்தூர், குருநல்லிபாளையம், சேரிபாளையம், கப்பளாங்கரை, செட்டிபுதூர், நெகமம், வழியாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்கிறது. இந்த லாரியில் கொண்டு செல்லப்படும் மண் பல்வேறு வழித்தடங்களில் பரவலாக கீழே விழுகிறது. அதுவும் வேகத்தடை உள்ள இடங்களில் அதிகளவில் மண் கொட்டி வருவதால் அந்த இடத்தில் மண் பரவலாக சிதறி விடுகிறது. இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் மண் கொட்டி உள்ள இடத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மண்ணில் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story