மூடப்படாத பள்ளங்களால் விபத்து அபாயம்


மூடப்படாத பள்ளங்களால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 13 Sep 2023 10:00 PM GMT (Updated: 13 Sep 2023 10:01 PM GMT)

கூடலூரில் மூடப்படாத பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி

கூடலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு வார்டு பகுதிகளுக்கும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கூடலூர் 13-வது வார்டு பகுதியான சவுடம்மன் கோவில் தெற்குத்தெருவில் கடந்த மாதம் சாலையின் நடுவே குடிநீர் சீரமைப்பு பணிக்காக பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. ஆனால் பணிகள் முடிந்து சில வாரங்கள் ஆகியும் அப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் அடிக்கடி சிக்கி வருகின்றனர். இதேபோல் கூடலூரில் மேலும் சில இடங்களிலும் சாலையோரம் மூடப்படாத பள்ளங்கள் உள்ளன. எனவே பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story