சாலையோரத்தில் மணல் படிந்து கிடப்பதால் விபத்து அபாயம்
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் சாலையோரத்தில் மணல் படிந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் சாலையோரத்தில் மணல் படிந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
4 வழிச்சாலை
கோவை- பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை உள்ளது. இதில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதன் கீழே உள்ள சர்வீஸ் சாலையோரத்தில் மழைநீர் செல்ல வசதியாக வடிகால் அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த பணி நிறைவு பெறாமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவில் கனமழை பெய் தது.
அப்போது மழைநீர் சாலையோரம் உள்ள வடிகாலில் செல் லாமல் தேங்கியது. மேலும் மழைநீர் சாலையில் பெருகி ஓடியது.
விபத்து அபாயம்
இதனால் கிணத்துக்கடவு போலீஸ் நிலைய பகுதியில் இருந்து பஸ்நிலையம் வரை சர்வீஸ் சாலையின் ஒரு பகுதி முழுவதும் மணல் படிந்து காணப்படுகிறது.
இதனால் அந்த ரோட்டில் பெரிய வாகனங்கள் வரும் போது மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் மணலில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. மேலும் விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
ஆனால் சர்வீஸ் சாலையில் கிடக்கும் மணலை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் அந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல் கின்றனர். அதோடு அந்த சாலையோரத்தில் சிலர் வாகனங்களை யும் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
நடவடிக்கை
எனவே கிணத்துக்கடவில் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள சர்வீஸ் சாலையோரத்தில் வடிகால் அமைக்கும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும்.
மேலும் சாலையோரத்தில் படிந்து கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.