மாநகராட்சி பகுதியில் நடமாடும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்


மாநகராட்சி பகுதியில் நடமாடும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்
x

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் பன்றிகளால் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பன்றிகளை அப்புறத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் பன்றிகளால் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பன்றிகளை அப்புறத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பன்றிகள் வளர்ப்பு

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட சில இடங்களில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பன்றிகள் போதிய சுகாதாரமான முறையில் வளர்க்கப்படாமல் நோய் பாதிப்புகள் ஏற்படும் வகையில் வளர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இவ்வாறு நோய் பாதிப்பு ஏற்படுத்தும் பன்றிகளை சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி பாண்டியராஜனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பன்றிகள் வளர்க்க கூடாது என விதிகள் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி தற்போது பன்றி வளர்போர்களிடம் இடங்களை மாற்ற வலியுறுத்தி வருகிறேன்.

அகற்ற நடவடிக்கை

திருத்தங்கல் பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்படுகிறது. இவைகள் முறையாக கொட்டகை அமைத்து போதிய உணவு பொருட்கள் கொடுத்து வளர்க்கப்படுவதில்லை.

கழிவுநீர் ஓடைகளில் கிடைக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு பன்றிகள் வளர்க்கப்படுகிறது.

பன்றிகளை கடிக்கும் கொசுகள் குழந்தைகளை கடித்தால் குழந்தைகளுக்கு மூளைகாய்ச்சல் நோய் பாதிப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் பன்றி வளர்க்கப்படும் பகுதியில் இருக்கும் ஈக்கள் மூலமும் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய ஒப்புதல் பெற்று பன்றிகளை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story