தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்


தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x

தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இக்கோவிலுக்கு பின்புறம் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பையை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story