தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்

பழைய ஏழாயிரம்பண்ணையில் தேங்கி கிடக்கும் குப்பையால் ெதாற்றுநோய் பரவும் அபாய நிலை நிலவுகிறது.
தாயில்பட்டி,
பழைய ஏழாயிரம்பண்ணையில் தேங்கி கிடக்கும் குப்பையால் ெதாற்றுநோய் பரவும் அபாய நிலை நிலவுகிறது.
குப்பைத்தொட்டி
வெம்பக்கோட்டை ஒன்றியம் பழையஏழாயிரம்பண்ணையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள குப்பைதொட்டி சேதமடைந்த காரணத்தினால் புதிய தொட்டி வைக்குமாறு இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் புதிய குப்பைத்தொட்டி வைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
ஒரு சிலர் வீடுகளில் உள்ள குப்பைகளை சுகாதார வளாகம் முன்பு கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்களுக்கு தொற்றுேநாய் பரவும் அபாய நிலை உள்ளது.
ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், புதிய குப்பை தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






