வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்தொற்று பரவும் அபாயம்


வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்தொற்று பரவும் அபாயம்
x

வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்தொற்று பரவும் அபாயம்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்தொற்று பரவும் அபாயம்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு வெள்ளத்திடலில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திட்டச்சேரி வடக்கு புத்தாறு ஆற்றில் இருந்து பாசனம் பெறும் பண்டாரவடை வாய்க்காலின் பிரிவு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ளது. இந்த வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் வாய்க்கால் தூர்வாரப்படாமல் கிடப்பதால் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் தேங்கி சாக்கடை போல் காட்சியளிக்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகத்திடமும், திருமருகல் பொதுத்துறை அலுவலகத்திலும் சரி செய்ய கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே வாய்க்காலை தூர்வாரி கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story