கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்


கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்
x

வடசேரி பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் பஸ்நிலையத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் பாதை சரிவர பராமரிப்பு இல்லாததால் பல நேரங்களில் சாக்கடை நீர் பஸ்நிலையத்தில் தேங்குகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள் கழிவுநீரை மிதித்து செல்லவேண்டிய நிலை உள்ளது. கழிவுநீர் செல்லும் பகுதியில் பாசிபடர்ந்து காணப்படுகிறது.

மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story