கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டத்தில் மூடி இல்லாத சாக்கடை கால்வாயால் நோய் பரவும் அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டத்தில் மூடி இல்லாத சாக்கடை கால்வாயால் நோய் பரவும் அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பந்தலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலைதோட்டம் ரேஞ்ச் எண் 2 பால்வாடி லைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். தொழிலாளர்கள், குடியிருப்புகளுக்கு நடைப்பாதைகளுடன் கால்வாய் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி சம்பந்தபட்டதுறை மூலம் நடைப்பாதையும் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்பட்டது. ஆனால் நடைபாதையில் சிமெண்டுகள் பெயர்ந்து நிலையிலும் உள்ளது. கால்வாய்களின் கரையோரப் பகுதிகளிலும் பெயர்ந்து வருகிறது. குடியிருப்புக்கு பின்புறம் கட்டப்பட்ட கால்வாயும் உறிஞ்சிகுழல் கால்வாயும் சமமாக இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடந்த தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனவே கால்வாய் மற்றும் நடைபாதை தரமானதாக அமைக்கவும், சாக்கடை கால்வாய்க்கு மேல் மூடி அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.