குப்பைகளை கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
குப்பைகளை கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி முதல் நிலை ஊராட்சியில் மதுரை சாலையில் குடிநீர் குழாய் அருகே திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதோடு இதுபோன்று திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story