நல்லாறு ஆக்கிரமிப்பால் ஓடையானது.


நல்லாறு ஆக்கிரமிப்பால் ஓடையானது.
x

தளி அருகே நல்லாறு ஆக்கிரமிப்பால் ஓடையானது.

திருப்பூர்

தளி

தளி அருகே நல்லாறு ஆக்கிரமிப்பால் ஓடையானது.

நல்லாறு

இயற்கை அளித்துள்ள வளங்களை பாதுகாத்து மழைப்பொழிவுக்கு ஆதாரமாக விளங்குவது வனப்பகுதி. அங்கு உற்பத்தியாகி அடிவாரப்பகுதியை நோக்கி ஓடி வருகின்ற ஒவ்வொரு துளி தண்ணீரையும் வீணாகாமல் தாங்கிச் சென்று நிலத்தடி நீர் இருப்பு உயர்வதற்கும் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளுக்கும், குடிநீர் திட்டங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது ஆறுகள். இதன் பங்கு இல்லாமல் சாகுபடி பணிகளும் உயிரினங்களின் வாழ்வாதாரமும் எண்ணிப் பார்க்க இயலாத ஒன்றாகும். ஆனால் ஆறுகளை பராமரித்து பாதுகாப்பதிலும் அதை தூர்வாரி சீரமைப்பதிலும் அலட்சியம் காட்டப்படுவதால் அவை சுயபொலிவை இழந்து படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது.

இதனால் ஆறுகளை ஆதாரமாகக் கொண்ட கடைக்கோடி கிராமங்கள் நீர்வரத்தை பெற முடியாமல் தவித்து வருவது தொடர் கதையாக உள்ளது.அந்த வகையில் தேவனூர் புதூர் அருகே நல்லாற்றை ஆக்கிரமிப்பு செய்து ஒரு சிலர் தென்னை மரங்களை நடவு செய்து உள்ளனர்.இதனால் பரந்து விரிந்த பரப்புடைய நல்லாறு படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சிறு ஓடை போன்று காட்சி அளித்து வருகிறது.இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு தடங்கல்கள் ஏற்பட்டு உள்ளதுடன் நீராதாரங்களும் விரைவில் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கின்றன.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் ஆறு முழுமையாக அழிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நல்லாற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்வருவதுடன் ஆற்றை முழுமையாக தூர்வாரி முறையாக பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.


Related Tags :
Next Story