இறையமங்கலம் காவிரி ஆற்றில் மாயமான சிறுவன் பிணமாக மீட்பு


இறையமங்கலம்  காவிரி ஆற்றில் மாயமான சிறுவன் பிணமாக மீட்பு
x

இறையமங்கலம் காவிரி ஆற்றில் மாயமான சிறுவன் பிணமாக மீட்பு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

திருச்செங்கோடு அருகே உள்ள ஆனைகரடு பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 17). இவன் நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் இருந்து விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் திருச்செங்கோடு அருகே இறையமங்கலம் காவிரி ஆற்றுக்கு சென்றான்.

அங்கு ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற முத்துவேல் தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மொளசி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய முத்துவேலை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் தீயணைப்பு படை வீரர்கள் பரிசல் ஓட்டிகளுடன் இணைந்து தேடினர். அப்போது காவிரி ஆற்றில் முத்துவேலை பிணமாக மீட்டனர். இதையடுத்து மொளசி போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story