தாராபுரம் அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்


தாராபுரம் அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்
x

தாராபுரம் அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கைவிடுத்துள்ளனா்.

திருப்பூர்

தாராபுரம் அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கைவிடுத்துள்ளனா்.

அமராவதி ஆறு

தாராபுரம் வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆறு மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களை சோ்ந்த பல லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நெல், கரும்பு, தக்காளி, கத்தாிக்காய், பீட்ரூட் உட்பட பல்வேறு பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மேலும் இந்த ஆற்றின் மூலம் உடுமலை, தாராபுரம், மூலனூா், வெள்ளகோவில் மற்றும் கரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீா் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தாராபுரம் பழைய ஆற்றுபாலத்தின் இருந்து வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருபுறமும் ஒரு கி.மீ தூரம் ஆற்றின் மையப்பகுதி மற்றும் கரையோர பகுதிகளில் முட்புதர்கள் ஏராளமாக வளா்ந்து உள்ளன. இதனால் அந்த பகுதியில் ஆற்றின் பரப்பளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீா் போக்குவரத்துக்கு தடை ஏற்படுகிறது.

மேலும் சீமை கருவேல மரங்கள் தண்ணீரை உறிஞ்சி கொள்வதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வறட்சி காலங்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்று சீமை கருவேல மரங்கள் முட்புதர்கள் தாராபுரத்திலிருந்து இருந்து கரூா் வரை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் வளா்ந்து உள்ளது.

அகற்ற வேண்டும்

முட்புதர்களால் ஆற்றின் அகலமும் குறுகியதால் தண்ணீரீ அணையிலிருந்து பாசன விவசாயத்துக்கு திறக்கும் போது வீணாகும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள சீமை கருவேல முட்புதர்களை அகற்ற வேண்டும் என தாராபுரம் பகுதி விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.


Related Tags :
Next Story