பாசன கால்வாய் தூர்வாரப்படாததால் சாலைகளில் வழிந்து செல்லும் ஆற்று நீர்


பாசன கால்வாய் தூர்வாரப்படாததால்  சாலைகளில் வழிந்து செல்லும் ஆற்று நீர்
x

குன்னத்தூர் அருகே பாசன கால்வாய் தூர்வாரப்படாததால் சாலைகளில் ஆற்று நீர் வழிந்து செல்கிறது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த குன்னத்தூர் பகுதியில் கமண்டல நாக நதி ஆற்றில் இருந்து பல்வேறு கிராமப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்லக்கூடிய பாசன கால்வாய்கள் உள்ளன.

இந்த கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் கடந்த 2 நாட்களாக சாலைகளில் ஆற்று நீர் வழிந்து செல்கிறது.

இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் ஏரிகளுக்கும் பாசனப்பகுதிகளுக்கும் செல்ல வழிவகை செய்ய பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story