ரூ.3 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி


ரூ.3 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி
x
திருப்பூர்


கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் ரூ.3.15 கோடி மதிப்பிலான புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

2 அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட காதக்கோட்டையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் எடைக்கல்பாடி ரோடு கெந்தாங்காடு ரோடு வழியாக தாராபுரம் மெயின் ரோடு மற்றும் எடைக்கல்பாடி சாலை முதல் நாலுகால் குட்டை வரை செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்றது.

மேலும் கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ரூ.72 லட்சம் மதிப்பில் வெள்ளகோவில் சாலையில் இருந்து கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக வேளாந்துறை வரை தார்ச்சாலை அமைக்கும் பணி, அய்யம்பாளையம்-எரச்சப்பாடிபதி சாலையை மேம்படுத்தும் பணிக்காக ரூ.43 லட்சம் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

மண்டல தலைவர்

இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் துரை தமிழரசு பழனிச்சாமி, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ், துணைத்தலைவர் சீதாமணி வடிவேல், கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் மற்றும் மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story