புதுப்பெண்ணை கடத்தியதாக வாலிபரை கைது செய்யகோரி மத்தூரில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை


புதுப்பெண்ணை கடத்தியதாக வாலிபரை கைது செய்யகோரி  மத்தூரில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்  போலீசார் பேச்சுவார்த்தை
x

புதுப்பெண்ணை கடத்தியதாக வாலிபரை கைது செய்யகோரி மத்தூரில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

கிருஷ்ணகிரி

மத்தூர்:

புதுப்பெண்ணை கடத்தியதாக வாலிபரை கைது செய்யக்கோரி மத்தூரில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுப்பெண்

மத்தூர் அருகே உள்ள தர்மதோப்பு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் சுவிதா (19). இவருக்கும், தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி அருகே உள்ள கரகபட்டி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு அருகே உள்ள ஆரவல்லி பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த சுவிதா திடீரென காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சுதாவின் தந்தை பெருமாள் மத்தூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் மத்தூர் அருகே உள்ள எக்லேரியன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அழகிரி (19) என்பவர் தனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், அவரை கைது செய்வதுடன், மகளை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

பரபரப்பு

ஆனால் போலீசார் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சுதாவின் உறவினர்கள் நேற்று மத்தூரில் உள்ள தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற மத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்ததுடன், பரபரப்பு ஏற்பட்டது.


Next Story