சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x

சோலார் அருகே நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு

சோலார்

சோலார் அருகே நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சாலை விரிவாக்க பணி

சோலார் அருகே உள்ள கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஈரோடு- காங்கேயம் ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் பள்ளம் தோண்டி சாலை விரிவாக்க பணியை தொடங்கினர். ஆனால் சாலை விரிவாக்க பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

கோரிக்கை

மேலும் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் பகுதி நால்ரோடு சந்திப்பாக இருக்கிறது. இதனால் பஸ் நிறுத்தம் அருகிலேயே ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம், வங்கிகள், அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, கோவில்கள் உள்ளன. மேலும் அந்த பகுதி பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடமாக இருப்பதால் சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story