குன்னமலை ஊராட்சியில் ரூ.46 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமிபூஜை
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை ஊராட்சி பாமாகவுண்டம்பாளையத்தில் இருந்து பாப்பாங்காடு வழியாக தாசம்பாளையம் வரை ரூ.46 லட்சத்தில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதேபோல் பாமகவுண்டம்பாளையத்தில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியையும் அவர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, ஒன்றிய செயலாளர் தனராசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குன்னமலை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி செய்திருந்தார்.