தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்


தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்
x
திருப்பூர்


மடத்துக்குளத்தையடுத்த மெட்ராத்தியில் பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா 2020-2021 திட்டத்தின் கீழ் திருமலைசாமிபுதூரில் இருந்து சீலநாயக்கன்பட்டி வழியாக துங்காவி மெயின்ரோடு வரை ரூ.2 கோடியே 11 லட்சத்து 73 ஆயிரம் செலவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பழைய, சேதமடைந்த சாலை உடைத்து அகற்றப்பட்டு ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டுள்ளது. மேலும் அதற்கு தண்ணீர் ஊற்றி வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்திலுள்ள தரைமட்ட பாலங்கள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் இந்த சாலையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story