டிரைவர் உள்பட 2 பேர் பலி


டிரைவர் உள்பட 2 பேர் பலி
x

கபிஸ்தலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிரைவர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பழனம் மேலத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 44). டிரைவர்.இவர் தனது உறவினர் பள்ளியக்ரஹாரம் மணல்மேடு தெற்கு தெருவை சேர்ந்த கருணாநிதியுடன்(60) நேற்று தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கபிஸ்தலம் அருகே உள்ள கணபதியக்ரஹாரம் என்ற கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

2 பேரும் பாிதாப சாவு

உறவினர் வீட்டில் விழா முடிந்த பிறகு பாஸ்கரும், கருணநிதியும் தங்கள் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சென்றனர். சோமேஸ்வரபுரம் பகுதியில் அவர்கள் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த தேக்கு மரத்தில் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாஸ்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த கருணாநிதியை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கருணநிதியும் பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கருணாநிதி உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.விபத்தில் உயிரிழந்த கருணாநிதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story