மரத்தில் கார் ேமாதி கவிழ்ந்தது; 4 பேர் படுகாயம்


மரத்தில் கார் ேமாதி கவிழ்ந்தது; 4 பேர் படுகாயம்
x

திருப்பனந்தாள் அருகே மரத்தில் கார் ேமாதி கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருகே மரத்தில் கார் ேமாதி கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோவிலுக்கு வந்தனா்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி சுபாஷ் நகரை சேர்ந்தவர் ராமபுத்திரன். இவருடைய மகன் ஸ்ரீகிருஷ்ணா(வயது 34). இவரது மனைவி சிவானி(29) மற்றும் நண்பர் பெங்களூருவை சேர்ந்த அய்யப்பன் மகன் மோகன்(34), இவரது மனைவி பூவிழி(28).இவர்கள் 4 பேரும் நேற்று காலை தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் மதியம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலுக்கு சாமி தாிசனம் செய்வதற்காக கும்பகோணம் வழியாக காரில் சென்றனர். காரை ஸ்ரீ கிருஷ்ணா ஓட்டினார்.

மரத்தில் மோதியது

கோவிலாச்சேரி கடைவீதியில் அவர்கள் காரில் சென்றபோது அகராத்தூர் ஊராட்சி கொத்தவாசலை சேர்ந்த சண்முகம்(70) என்பவர் சாலையின் குறுக்கே மொபட்டில் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க ஸ்ரீகிருஷ்ணா திடீரென காரின் பிரேக்கை அழுத்தினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பறந்து சென்று சுமார் 20 மீட்டர் தூரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது

4 பேர் படுகாயம்

இதில் காரில் பயணம் செய்த பூவிழிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. , மோகன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் முதியவர் சண்முகத்துக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 4 பேரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அங்கு முதலுதவி பெற்ற பூவிழி, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் மோகன் ஆகியோர் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story