பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
மாணவர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள புஞ்சையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகன் காளிதாஸ்(வயது19). இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி முதல் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தண்டைலச்சேரி பகுதியில் இருந்து காளிதாஸ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றனா்.
பரிதாப சாவு
அப்போது வேலூர்பாலம் பகுதியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதி நிலைத்தடுமாறி விழுந்ததில் காளிதாஸ் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மாணவர் விஜய் படு்காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.