மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிாிழந்தார்.

தஞ்சாவூர்


பூதலூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ்(வயது57). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சிலம்பாயி. கணவன்- மனைவி இருவரும் ஒரு ஸ்கூட்டரில் அய்யனாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பாலாயிவயல் என்ற இடத்தில் உள்ள சிறு பாலத்தின் அருகே இவர்கள் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் பின்புறமாக ரெங்கராஜ் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில்படுகாயமடைந்த ரெங்கராஜ் பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ைசக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ரெங்கராஜ் உயிரிழந்தார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.


Next Story