முதியவர் சாவு


முதியவர் சாவு
x

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

வல்லம்;

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகில் உள்ள கீழநத்தம் பகுதியை சேர்ந்தவர் பல்லக்கருப்பு (வயது 65). இவர் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து தஞ்சை- திருச்சி சாலையில் நடந்து சென்றார். அப்போது செங்கிப்பட்டி பாலம் அருகே அவர் நடந்து சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பல்லகருப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பல்லக்கருப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story