அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு


அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு
x

நீடாமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நாகப்பட்டினம் மாவட்டம் மேலசெருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது55). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் நீடாமங்கலம் அருகே வெள்ளங்குழி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க நீடாமங்கலத்துக்கு வந்து அண்ணாசிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குமார்மயங்கிய நிலையில் கிடந்தாா். இதனால் நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குமார் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story