பெயிண்டர் சாவு


பெயிண்டர் சாவு
x

நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் பெயிண்டர் உயிரிழந்தார்.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது30). பெயிண்டர். நேற்றுமுன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் நீடாமங்கலத்திலிருந்து கோவில்வெண்ணிக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரில் வேகமாக வந்த ஜீப்பும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜீப் டிரைவர் கொட்டையூர் சர்வமான்யத்தைச் சேர்ந்த காளிதாஸ்(29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான செந்தில்குமாருக்கு தீபா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

1 More update

Next Story