மோட்டார் சைக்கிள் மோதி கோவில் நிர்வாகி பலி


மோட்டார் சைக்கிள் மோதி கோவில் நிர்வாகி பலி
x

திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கோவில் நிர்வாகி பலியானார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் மூக்கையன் (வயது64). இவர் மேல ஊரணிபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்து ஆன்மிக பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்து சிலருடன் சேர்ந்து பட்டுக்கோட்டை- திருவோணம் சாலையில் மூக்கையன் நடை பயிற்சி சென்றுவிட்டு, அதே சாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். மேலஊரணிபுரம் மர அறுப்பு மில் அருகே வந்து கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்புறம் கறம்பக்குடியை சேர்ந்த கார்த்திக் (26) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மூக்கையன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த மூக்கையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story