கிருஷ்ணகிரியில், விபத்தில் 2 பேர் பலி: உடலை தர தாமதம் ஆனதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்


கிருஷ்ணகிரியில், விபத்தில் 2 பேர் பலி:  உடலை தர தாமதம் ஆனதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
x

கிருஷ்ணகிரியில் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து தர தாமதப்படுத்தியதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து தர தாமதப்படுத்தியதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

கிருஷ்ணகிரி கார்வேபுரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் முரளி (வயது 35), ஹரீஷ் (32). இவர்கள் நேற்று முன்தினம் காரில் தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் மேம்பாலத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியது.

இந்த விபத்தில் முரளி, ஹரீஷ் 2 பேரும் பலியானார்கள். அவர்களின் உடல் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் வரையில் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து தர தாமதமானது. இதை கண்டித்து இவர்களது உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் சமரசம்

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மற்றும் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பிரேத பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story