அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x

அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. கைதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெண்ணாடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

பெண்ணாடம்,

வளையமாதேவி கிராமத்தில் சுரங்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் கிளை செயலாளா் சந்திரசேகரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகே நகர செயலாளர் நீதிமன்னன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் .முல்லைநாதன், கண்ணகி, நாகராஜ், நகர மன்ற உறுப்பினர் கமல்ராஜ், ராஜவேல், நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story