பா.ஜ.க.வினர் சாலை மறியல்


பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x

பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

சென்னையில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதில் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய கோரியும் புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 40-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

1 More update

Next Story